×

கைரேகை பதிய பயோ மெட்ரிக் இயந்திரம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு

 

திருவாரூர், ஜூலை 21: திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும் 31ம் தேதி நடைபெறுவதாக தேர்வு கட்டுப்பாட்டு குழு பேராசிரியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதுகலை படிப்புகளான எம். எஸ். சி கணிதம், எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி, எம்.எஸ்.சி இயற்பியல் மற்றும் டிப்ளமோ இன் டேட்டா சயின்ஸ் மற்றும் டிப்ளமோ இன் பிட்னஸ் மேனேஜ்மென்ட் ஆகிய 2 வருட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வானது வரும் 31ம் தேதி பல்கலைக்கழகத்தின் நடைபெறுகிறது.

இந்த படிப்புகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்குரிய அனுமதி சீட்டு வரும் 26ம் தேதி முதல்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு https://cutn.ac.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 31ம் தேதி நடக்கிறது

The post கைரேகை பதிய பயோ மெட்ரிக் இயந்திரம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Fingerprint ,Machine ,Tiruvarur ,District ,Tamilnadu Central University ,Tamil Nadu Central University ,
× RELATED திருவெறும்பூரில் 30 சவரன் நகை கொள்ளை..!!